Thursday, March 12, 2009

Wednesday, March 11, 2009

கொத்துக் கொத்தாய்குண்டுமழை பொழியுதம்மா... என் ஈழத் தமிழினமே சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

ரெண்டு நாலாகி
நாலு பதினாறாகி
நாலா புறம் சிதறுதம்மா...

நெஞ்சை பிளக்குமந்த
நஞ்சு குண்டுகளெல்லாம்
இளம் பெண்டுகளை
தேடித்தேடிக் கொல்லுதம்மா...

ஓடி ஒளிய
வழியேதுமில்லையம்மா...
பாம்பு பட்சிகளோடு- எங்க
பொழுதும் கழியுதம்மா..
பொட்டல் காடே விதியென்று
வாழ்க்கை நகருதம்மா...
நாதியற்று
நரகத்திலே வாழுறம்மா...
சர்வதேச சமூகமே
கண்சாட்சி சொல்லுமம்மா...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

தட்டில் சோறில்லை
நெஞ்சில் பாலில்லை-இருக்கும்
நிலாவையும் காட்ட முடியவில்லை
வாணூர்தி வண்டுகளாய்
வட்டமடிக்குதம்மா...
இளமொட்டுகளை
இரக்கமின்றி கருக்கதம்மா...

உசுரத்தவிர
உடம்பில் வேறேதும்
இல்லையம்மா-அட
என்னாத்துக்கு
என்னிணத்தை
கருவருக்கத் துடிக்குதம்மா...

சுயநிர்ணய உரிமையென்றால்
சுர்ர்ரென்று ஏறிடிடுதே...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

அறிவியல் யுகமென்றீர்
பாஸ்பரஸ் குண்டு வீசி
பொசிக்கிடவா?
சாட்டிலைட்டை பறக்கவிட்டீர்
எம்மைக் கொத்தித் தின்றிடவா?

காட்டுமிராண்டிக் கூட்டங்களா
கண்ணைக் கட்டிக் கொண்டீங்களா?
கண்சாட்சி சொல்லிடத்தான்
சர்வதேச சமூகங்களா?

இனவெறிக் கூட்டங்களா
இரையாக மாட்டோமடா
உயிர்பிச்சை கேட்கவில்லை
சுயநிர்ணய உரிமைகேட்டு சாகிறோமடா...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

சிங்களவன் வார்த்தைக்கும்-உங்க
மன்மோகன் வார்த்தைக்கும்
வேறுபாடு தெரியலியே
எல்லாமும் ஒன்னுபோலத்தானே
எமக்கும் கேட்டிடுதே...

எம்மைக் கொல்லும்
ஆயுதத்திலே-உன்
வேர்வைத்துளி கண்டேனம்மா...

மூச்சுவிட மனம்
மறுத்திடுதம்மா..
வேவு பார்த்திடுதே
ரேடாரென்று... இதை
கண்டும் காணாது
முகம் திருப்பி செல்லுறியே
‘‘அப்பாவித் தமிழனைக்
கொல்லாதேனு’’
கொலைகாரனிடம்
கெஞ்சுறியே!

இனி என்ன
சொல்வதம்மா...
இரக்கமில்லா
உன்னை கண்டு...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

உன் கண்ணீர்த் துளி
தேவையில்லை...
காசுபணம்
கேட்கவில்லை...
கொலைகார கூட்டமெல்லாம்
இலங்கையில் மட்டுமில்லை...

மன்மோகன்... முகர்ஜியின்னு
பலபேரில் திரியுமந்த
சதிகார கூட்டங்களை
சந்திக்கு இழுத்து வந்து

‘‘பாசிச சிங்களனுக்கு
பங்காளியாக கூட நின்னு
மேலாதிக்கம் செய்திடுதே
இந்திய அரசென்று’’

உரக்கக் குரலெழுப்பிடம்மா... அவன்
குரல்வளையைப் பிடித்திடம்மா.

-இளங்கதிர்.

Tuesday, March 10, 2009

வழக்குறைஞர்கள் போராட்டத்தை ஆதரித்து குரல்கொடுக்க தடை!
உழைக்கும் மக்களே, இது போலீஸ் - வக்கீல் பிரச்சினை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சினை!

பொதுக்கூட்டம்
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்

10.3.09 செவ்வாய்க் கிழமை
மாலை 6 மணி

தலைமை: தோழர் முகுந்தன்,
தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை: தோழர் மருதையன்,
பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்.

கலை நிகழ்ச்சி
ம.க.இ.க கலைக்குழு

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

***************************************************************

Related:

Wednesday, March 4, 2009

ஈழத்தமிழர்களுக்காக போராடிய புமாஇமு மாணவர்கள் கைதினை கண்டித்து நாளை (மார்ச் 5) தெருமுனைக்கூட்டம்!

இடம்:

குரோம்பேட்

தபால் நிலையம் எதிரில்

காலை 9 மணிக்கு

..

ஈழப் படுகொலையையும் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்தற்காக பு.மா.இ.மு மாணவர்கள் மீது போலீசு தாக்குதல்! பொய் வழக்கு! சிறை!!

"ஈழத்துல உங்க அக்காளையா... புடுங்குறாங்க? அங்க என்ன நடந்தா உனக்கென்னடா?
நாங்க ஹைகோர்டிலேயே பூந்து அடிச்சோம்...
உங்கள ரோட்ல வுட்டு அடிப்போம்... எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது!"
- கண்ணன், இன்ஸ்பெக்டர்,
அண்ணாசதுக்கம் காவல்நிலையம்.காக்கிசட்டை கிரிமினல்கள் கொடுத்த பொய் தகவல்களை செய்தியாக வெளியிட்ட நாளிதழ்கள்


Tuesday, March 3, 2009

ஈழத் தமிழ் மக்களுக்காக வாயிற் கூட்டம் நடத்திய பு.மா.இ.மு மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு கைது!

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து போரை நடத்தி வரும், இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் தோழமை அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்நிலையில் இன்று (மார்ச் 3) காலை ஈழத்தமிழ் மக்களுக்காக மாநிலக் கல்லூரியில் வாயிற்க்கூட்டத்தை ஏற்பாடு செய்து புமாஇமு சேர்ந்த 5 மாணவர்கள் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்து உள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்காக மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய காலவரையின்றி கல்லூரிகளை மூடிய கலைஞர் அரசு, இன்று நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. வழக்கறிஞர்களை தாக்குதலை தொடர்ந்து இன்று ஈழத் தமிழ் மக்களுக்காக போராடுபவர்களை தாக்குவதையே கலைஞர் அரசு திட்டமிட்டு செய்து வருகிறது.

Saturday, February 28, 2009

இந்தியாவில் வேறு எங்கும் இல்லை! இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான்!!கலைஞர் ஆட்சியில்....

 • ஈழத்தமிழ் மக்களை கொன்றொழிக்கும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசின் நம்பகமான ஒரே காவலர் & ஒரே கூட்டாளி!
 • கல்லூரிகளை காலவரையின்றி மூடி மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த ஒரே தமிழனத் தலைவர்!

 • சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிசட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்! ஈழ மக்களின் எதிரி, பார்ப்பனத் திமிர் பிடித்த சு.சாமியை தாஜா செய்ய தி.மு.க அரசின் அடியாள் வேலை!

 • ஒரு நாளைக்கு ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் அடிமை சாசனத்தில் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்து போட்டு விரைவாக நாட்டை விற்கும் ஒரே ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி!
 • 123 அடிமை சாசனத்தின் நிரந்தர அடிமை!
 • காலை 4 மணி எழுந்து அயராது உழைத்து, இதுவரை இந்தியா கண்டிராத பிரம்மாண்டமான கொள்ளை! ஸ்பெக்ட்ரம் சுவாகா ரூ 60,000 கோடி!!
 • இந்தியாவிலேயே அதிக மக்களை வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளி தமிழகம் தொடர்ந்து முதலிடம்!


 • முரசொலி, எதிரொலி, சிரிப்பொலி, இசையருவி, கலைஞர் செய்திகள் என சில வினாடிகளில் தங்களது சுவிஸ் வங்கி பணத்தை ஆடம்பரமாக செலவிடும் ஏழை திரைக்கதை ஆசிரியர்!
 • கால்ஸ் சாராய ஆலைகள் போல பல ஆலைகளுடன் கைகோர்த்து கொண்டு இந்தியாவிலேயே சாராய விற்பனையில் தமிழக அரசு கடைகள் தொடர்ந்து முதலிடம்! • குஜராத் இனப்படுகொலையினை ஆதரித்து மெளனம் காத்தவர்!
 • பாசிச காங்கிரசோடும், இந்துவெறி பார்ப்பன பாசிச பாஜகவோடும் மாறி மாறி கூட்டணி கட்டிக் கொண்டும், 'முற்போக்கு & மதச்சாற்பற்றவர்' என தம்மை காட்டிக்கொண்டும் "தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்கசாதி வெறியர்களால் தாக்கப்படுவதில்" இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து முதலிடத்தில் வைத்திருப்பவர்!

 • அழகிரி, தளபதி, கனிமொழி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, உதயநிதி ஆகிய தமிழக மக்களின் நலன்களுக்காக தள்ளாத வயதிலும் பாடுபடும் ஒரே தாத்தா!

வெளியீடு: தமிழக உழைக்கும் மக்கள்

இணைப்பு