Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, February 14, 2009

புரட்சிகர கவிதைகள் 2 : "யார் இந்த மகாத்மா?"



வாழ விரும்பிய மக்களை
வாழ்க்கை தளத்தில் இருந்து
வழுக்கி விடவே வழுக்கை தலை.

இந்திய சமஸ்தானங்களில் சாதியை ஒழிக்க
ஈ.வெ.ராமாசாமிகள் உருவாகிவிடக்கூடாது என்பதை
ஊடுறுவி பார்க்கவே மூக்கு கண்ணாடி

பார்ப்பன பன்னிகளின் அருமை பெருமைகளை
பேசுவதற்கே பற்களற்ற பொக்கை வாய்.

பிர்லாவின் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டே
இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை
நெறிப்பதற்காகவே நீண்டு வளர்ந்த
இரு கைகள்

உழைக்கும் மக்களின் விடுதலை போராட்டத்தை
அடக்கி ஒடுக்கவே கையில் கைத்தடி

குஜராத் பனியாக்களின் சொத்துக்களையும்
இந்திய நிலப்பிரபுக்களின் நிலங்களையும்
உழைக்கும் மக்கள் பறித்துவிடுவார்கள்
என்பதற்காகவே, தன்னை பின்பற்ற கோரி
ஒரு முழவேட்டியை உடலில் சுற்றி கொண்ட
எளிமையின் உருவம்,

வெள்ளை எசமானர்களுக்கு சிம்மசொப்பனமாய்
திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின்
கழுத்தை முறித்த துக்குகயிறை பார்த்து
புன்னகைத்த முகம்

உலகம் கடவுளுக்கு கட்டுபட்டது
கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுபட்டது
இதனை அன்றே சொன்னான் மனு

ஆம்
மக்கள் கடவுள்கள்
காந்தி என்ற மந்திரத்துக்கு கட்டுபட்டவர்கள்
காந்தி என்ற மந்திரமோ பார்ப்பன-பனியாக்களுக்கு
கட்டுபட்டது.
புரிகிறதா?
மணுதர்ம குப்பையில் உருபெற்று எழுந்த
20ம் நூற்றாண்டின் மனுதான்
பொக்கைவாய் காந்தி
அவனின் மக்கள் விரோத பாசிச செயல்களுக்கான
பட்டம்தான் 'மகாத்மா' என்பது

மொத்தத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில்
தங்களை அர்ப்பணித்து கொண்ட மாவீரர்களை
வெள்ளையனிடம் காட்டி கொடுக்கும் துரோக
கதாபாத்திரம் தான்
மகாத்மா காந்தி

வரலாறுதோறும் அந்த துரோகம் மீண்டும் மீண்டும்
உருபெற்று எழ முயலும்
நாம் அது உருபெற்று எழும் மனுதர்ம குப்பையை
சோசலிச தீயிட்டு கொலுத்துவோம்
மாமேதை மார்க்ஸ் நமக்கு இதனைத்தான்
கற்பிக்கிறார்.

Thursday, January 22, 2009

மௌனம் எனும் கொடிய ஆயுதம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
"மயிரை" வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!

நான்டெட்டும்
மாலேகானும்
மறுதலிக்கிறது-இம்
மதிப்பீட்டை!

சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

"காவி" கொடி
பிடித்தலையும்
காட்டுமிராண்டிக்
கூட்டத்திடமிருந்து
விலகியிருப்பதே
நல்லது!

இல்லையேல்
விலங்குகளாய்
நாமும் மாறிட நேரும்
குஜராத்,ஓரிஸா போல...

பார்ப்பன
பயங்கரவாதத்துக்கு
நாம் வழங்கிய
பலமான ஆயுதம்
"மௌனம்"!

மனிதனாய்
மாற
மௌனம்
கலைவோம்!

-இளங்கதிர்.

ஆர்.டி.எக்ஸ். மௌனம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
'மயிரை' வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!


மாற்றிக் கொள்ளுங்கள்
மதிப்பீடுகளை!

நான்டெட்,
மாலேகான்,
ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.-இது
பார்ப்பன பயங்கரவாதம்!


சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

அவர்கள்
நாளையே
வீசலாம்-அடுத்த
வெடிகுண்டை

நம்
'மௌனத்தை'
அதில் நிரப்பி!

தேவை
எச்சரிக்கை மட்டுமல்ல...

-இளங்கதிர்.

Saturday, November 15, 2008

நாம் என்ன செய்யப் போகிறோம்!

நவம்பர்‍‍‍‍-7,2008
ரஷ்யப் புரட்சியின்
91-வது ஆண்டு்விழா!
..
உள்ளமெங்கும்
மகிழ்ச்சி ததும்பி
அரங்கமெங்கும்
நிரம்பி வழிந்த
குழந்தைகளின்
குதூகலமும்
அரங்க நிகழ்வுகளும்

ரஷ்யாவைப்போல்
இங்கோர்
புரட்சி நிகழ்ந்து விட்டதாய்
என்னும்படியாக
எதிர் காலத்திற்கே
இட்டுச்சென்றது
என்னை!

குறையேதும்
காணுமுடியாத
குழந்தைகளின்
அரங்கேற்றத்தில்...

தொழில்முறை கலைஞனின்
செய்நேர்த்தி கொண்ட
இசைச்சித்திரக்குழு
மாணவர்களின்
திறமையில்...

மனதை வருடும்
இசையில்
பாரதிதாசனின்
தாலாட்டுப்பாடல்-தந்த
பரவசத்தில்...

"எங்கிருந்து
ஒலிக்கிறது இந்தக்குரல்"-
வினாயெழுப்பி
வியக்கவைத்த
அந்தக் கிழட்டு
இளைஞனின்
கம்பீர குரலின்
பிரமிப்பில்...

மொத்த நிகழ்வும்
தந்த போதையில்
இலயித்துப்போன
என்னை...

நிகழ்காலத்துக்கு
என்'காலத்'துக்கு
இழுத்து வந்தது
"இப்படியிருந்தால்
எப்படி வரும் புரட்சி?"-
உரைவீச்சு.

இமை மூடி
செவி பொத்திய போதும்

"என்னால்
இவ்வளவுதான் தோழர் முடியும்..."

"கொஞ்சம்
குடும்பத்துல பிரச்சிணை..."

"பொதுநிகழ்ச்சிக்கு வார்ரேன்
நன்கொடை தார்ரேன்
அதுக்கு மேல..."

இன்னும் பல விதமாய்...

செவுளில்
மோதிச் சென்றன...

இன்று காலை வரை
நான் சொல்லி வந்த
அற்ப காரணங்கள்!

"எப்படிங்க
இருந்தது நிகழ்ச்சி?"-
தோழரின் கேள்வி...

செவியில் நுழைந்து
மனதை குடைந்து
என்னுள்
எதிரொலித்துக்
கொண்டேயிருக்கிறது...

புரட்சிக்காக
"நாம்
என்ன செய்யப் போகிறோம்?"என்று!

_ இளங்கதிர்.

Saturday, July 12, 2008

கல்விக் கடவுள் டில்லி பாபு!

கல்விக் கடவுள் சரசுவதி
கையிலிருக்கும்
வீணையை எறிந்து
வெகுநாளாயிற்று
எடை மிசினை ஏந்தியபடி
எதிர்பார்த்திருக்கிறான்
பக்தர்களை.

மெனக்கெட்டுப் படித்து
நல்ல மதிப்பெண் வாங்கிய
பையனை
பணக்கட்டு ஏதுமின்றி
பள்ளிப்படியிலேற்றினார்
சுமைதூக்கும் தொழிலாளி
டில்லிபாபு.

பத்தாயிரம்
நன்கொடை தந்தால்
பதினோராம் வகுப்பு
கிடைக்குமென்று
கட்டாயமாகச் சொன்னார்
பள்ளி நிர்வாகி
ஆலேசமடைந்த தொழிலாளியை
ஆற்றுப்படுத்தினர்
சில ஆசிரியர்கள்.

இங்காவது இத்தோடு,
மற்ற இடத்தில்
அதுக்கு இதுக்கு என்று
பணத்தைப் பறிப்பான்
கொத்தோடு!
கூட்டிக் கழித்துப்பார்!
பேசாமல்
கேட்டதைக் கொடுத்து
பிள்ளையைச் சேர்!
என்று
கணக்கு வாத்தியார்
புரியவைத்தார்.

கஷ்டப்பட்டு விதைச்சாதான்
இஷ்டப்பட்ட விளைச்சல் வரும்!
பருவத்தே பயிர் செய்ய
பணத்தைப் பார்க்காதே!
என்று
புத்தி சொன்னார்
புவியியல் ஆசிரியர்.

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு -
அதுபோல
ஒவ்வொரு படிப்புக்கும்
ஒரு விலை உண்டு
என்ன நீ இது புரியாம இருக்க?
என்று
எரிச்சலடைந்தார்
அறிவியல் ஆசிரியர்.

தன்மையோடு இடைமறித்தார்
தமிழாசிரியர்;
உயிரும் மெய்யும் சேர்ந்தாதன்
உயிரமெய்யெழுத்து
அதுபோல-
பணமும் படிப்பும் சேர்ந்தால்தான்
பளபளப்பு
பணத்துக்காக
நல்ல பள்ளியை விட்டால்
அப்புறம்
உன் பையனின் தலையெழுத்து?

எதற்கும் சம்மதிக்காத
தொழிலாளியைப் பார்த்து
"நீ போய்யா வெளியிலே" என்று
வெறுப்புடன்
சத்தம் போட்டார் நிர்வாகி.
பதிலுக்கு
"இதாண்டா ஆயுத எழுத்து"
என்று
சுமைதூக்கும் கொக்கியால்
தலையில் எழுத..
இரத்த வெள்ளத்தில்
நிர்வாகி.
கைதாகி, வழக்கில்
தொழிலாளி.

இப்போது-
கட்டாய நன்கொடை
பள்ளியில் இரத்து.
கல்விக் கபாலத்தை
திறந்து விட்ட
டில்லி பாபுவை
கையெடுத்துக் கும்பிடுகிறது ஊர்.

-துரை.சண்முகம்

'கட்டாய நன்கொடை கேட்ட பள்ளி நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது' என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை.


நன்றி : புதிய கலாச்சாரம் ஜுலை 2008
இணைப்பு