Friday, April 18, 2008

அறிவியக்கத்தின் அவசியம்


·


அறிவியக்கத்தின் அவசியம்
அறிவியல் ஓர் அற்புதமான அறிவாயுதம். அறிவியல் மட்டும் இல்லையென்றால் நாம் அனைவரும் இன்னமும் காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாக அம்மணமாய் அலைந்து திரிந்து கொண்டிருப்போம்.

மனித சமுதாயத்தின் இன்றைய நாகரிகம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு மூலகாரணமாக இருப்பது அறிவியல். அதுதான் இயற்கையையும் மனிதனையும் சூழ்ந்திருந்த பல புதிர்களை அவிழ்த்து, பிரமிப்பூட்டும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. மண்ணையும் விண்ணையும் நீரையும் நெருப்பையும் காற்றையும் வென்றிருக்கிறது.

இவையெல்லாம் அறிவியலின் விளைவுகள்தாம் என்று அறியாமலேயே, அறிவியலின் பயன்பாடுகளை நமது அன்றாட வாழ்க்கையின் ஆயிரத்தெட்டு வழிவகைகளில் நாம் அனுபவித்து வருகிறோம். இன்றைய வாழ்வின் இவ்வளவு வசதிகளும் வாய்ப்புகளும் வளர்ச்சியும் மனிதர்களின் அறிவியல் முயற்சிகளால் கிடைத்தவை.

அறிவியலை மதிக்காத, அறிவியல் பார்வை இல்லாத, அறிவியல் வழிநடக்காத எந்தவொரு நாடும் சமுதாயமும் முன்னேறியதாக வரலாறே கிடையாது. நமது தொழில்நுட்பம், மருத்துவம், விவசõயம், நிர்வாகம், பொருளாதாரம் போன்றவைகளின் தேவைகளுக்கு மட்டுமல்ல; அரசியல், சமூகம், பண்பாட்டுப் பிரச்சினைகள் சிக்கல்களுக்கும் அறிவியல் ஆதாரபூர்வமான அணுகுமுறை மூலமே தீர்வு காணவேண்டும். அது ஒன்றுதான் முற்போக்கானதாகவும் சரியானதாகவும் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் இருக்க முடியும். ஆகப் பெரும்பாலான மக்கள் ஏற்கத்தக்கதாகவும் இருக்க முடியும்.

மூடத்தனங்கள் போதிக்கப்படுகின்றன

நமது நாட்டிலும் சமுதாயத்திலும் நமது சிறு வயது முதலே அறிவியல் ஆதாரபூர்வமான சிந்தனைக்கு மாறான, எதிரான கருத்துக்கள் குடும்பம், சாதிமதசமூக உறவுகள், பள்ளிகல்லூரிகள், மக்கள்திரள் ஊடகங்கள் மூலமாகப் போதிக்கப்படுகின்றன.

நமது முன்னோர்கள் ஏற்படுத்தியவை, பாரம்பரியமானவை என்கிற காரணத்திற்காக குடும்ப ரீதியிலான சடங்குகள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள், சாதிய ரீதியிலான பழக்க வழக்கங்கள், ஒழுக்க முறைகள், தொழில் முறைகள், மதரீதியிலான நம்பிக்கைகள், கட்டுப்பாடுகள், வழிபாடுகள் போன்றவை இன்றைய தலைமுறையினர் மீது திணிக்கப்படுகின்றன. அவை அறிவியலும் நாகரிகமும் வளர்ச்சியடையாத நிலையில் ஏற்படுத்தப்பட்டவை. இன்றைய காலத்திற்கும் பகுத்தறிவுக்கும் பொருத்தமற்றவை. சொல்லப்பேõனால் இவற்றில் பலவும் மூடநம்பிக்கைகள். இவற்றால் குடும்ப உறவுகள் வக்கிரமடைந்துள்ளன, கொடூரமாகியுள்ளன. சாதிமத உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டு வெறியாக மாறியுள்ளன. சாதிமதக் கட்டுக்கோப்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே சாதி மற்றும் மதம் மாறிக் காதலிக்கும் மணந்து கொள்ளும் இளம் தலைமுறையினர் சாதி, மத வெறியர்களால் வெட்டியும், உயிரோடு கொளுத்தியும், விஷம் கொடுத்தும் கொல்லப்படுகின்றனர். இசுலாமிய மதமென்றால் "ஷாரியத்' குடும்பச் சட்டம் பெண்களை ஒடுக்கி வைக்கிறது; இந்து மதமென்றால் சாதியக் கொடுமைகள் தவிர உடன்கட்டை, சிறுவயதுத் திருமணம், விதவைக் கோலம் என்று மூடத்தனங்கள் தொடர்கின்றன. சாதிய மற்றும் குடும்ப கௌரவம், மானம், மரியாதையைக் கட்டிக் காப்பதற்காக ""கட்டப் பஞ்சாயத்து'' மற்றும் ""அரிவாள் கலாச்சõரம்'' கொடிக்கட்டிப் பறக்கிறது.

நமது பள்ளிகள், கல்லூரிகளில் அறிவியல் முதலிய நவீன பாடத்திட்டங்கள் ஒருபுறம் போதிக்கப்பட்டாலும், அறிவியல் சிந்தனைøய மழுங்கடிக்கும் வகையிலான புராணங்கள் இதிகாசங்கள், இலக்கியங்கள் காப்பியங்கள், வழிபாடுகள் தொழுகைகள், ஒழுக்கநெறி போதனைகளும் நடத்தப்படுகின்றன. தற்போதைய சமுதாயத்திலும், நிறுவனங்களிலும் நிலவும் பிற்போக்கான கருத்துக்களை விமர்சனபூர்வமாகப் பகுத்தறியும் அறிவியல் பார்வையும் போதிக்கப்படுவதில்லை. கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான ஒரு கருவி என்ற பிழைப்புவாதக் கண்ணோட்டம் மட்டுமே போதிக்கப்படுகிறது. அதனால்தான் படித்துப் பட்டம் பெற்றவர்.

களிலேயே கூட பல பேரிடம் அறிவியல்பூர்வமான வாழ்க்கைக் கண்ணோட்டம் இல்லை. இல்லாத தலைஎழுத்தையும், விதிவசத்தையும் நம்புபவர்களாக உள்ளார்கள்.

மூடத்தனங்கள் திணிக்கப்படுகின்றன

பிற்போக்கான, பகுத்தறிவுக்குப் புறம்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் தனிமனித விவகாரங்களாக இருந்தால் அவற்றின் பாதிப்புகள் அவர்களோடு நின்றுவிடும். ஆனால், அவை மற்ற பிரிவு மக்கள் மீதும் ஒட்டுமொத்தமாக நாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் திணிக்கப்படுகின்றன. இதனால், குறிப்பாக சாதிமத முரண்பாடுகள் முற்றி நாடே இரத்தக் களறியாக்கப்படுகிறது. சாதிமதவெறிப் பயங்கரவாதப் படுகொலைகள் அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டுத் துறைகளில் தமது சொந்த முயற்சியில், சொந்த வாழ்க்கையில் தலை நிமிரும் போதெல்லாம் ஆதிக்க சாதியினர் வெறித்தனமாகத் தாக்குகின்றனர். இசுலாமியக் குடும்பச் சட்டம் ஷாரியத்தின் பெயரால் முசுலீம் மதகுருமார்கள் ""பட்வா''க்கள்கட்டளைகள் பிறப்பிக்கின்றனர்; ஜமாத்துக்களில் பிற்போக்கான கட்டைப் பஞ்சாயத்துக்கள் நடத்தி அப்பாவிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

இந்திய தேசியம் என்பது இந்து பாரம்பரியம், இந்துக் கலாச்சõரம் என்றும் இந்து இராஷ்டிரம், இராம ராஜ்ஜியத்தை நிலைநாட்டுவது என்றும் கூறிக் கொண்டு பார்ப்பன சனாதனக் கோட்பாடுகளை அனைத்துப் பிரிவு மக்கள் மீதும் திணிக்கும் முயற்சியில் நாட்டின் பெரிய அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. முற்போக்கான, மதச்சார்பற்ற இயக்கங்கள் கட்சிகள் என்று கூறிக் கொள்பவை கூட இந்து மதவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டு இந்திய தேசிய பாரம்பரியம், பண்பாடு என்பது இந்துமதம் சார்ந்ததென்றே கருதுகின்றன. இந்த நாட்டில் வாழும் இசுலாமியர்களும், கிறித்தவர்களும் முறையே மொகலாய, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் சந்ததியினர்தாம் என்றும், ஒன்று அவர்கள் அனைவரும் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டிய துரோகிகள் அல்லது இந்துத்துவத்தை ஏற்றுத் தமது மத அடையாளங்களைத் துறக்க வேண்டியவர்கள் என்றும் இந்துமதவாதிகள் கருதுகின்றனர். மாற்று மதத்தினரின் ஆக்கிரமிப்பின்போது இந்துக்கள் இழந்த "கௌரவத்தை' மீட்க
வேண்டுமென்றும்; மசூதிகளையும் கிறித்துவ சபைகளையும் இடித்துத் தள்ளி, அங்கெல்லாம் இந்துக்கோவில்களை நிறுவ வேண்டும் என்றும் இலக்கு குறித்துள்ளனர்.

மாற்று மதத்தினர் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாத அனைத்து சாதி மக்களும் தமது சொந்த அடையாளங்களைப் பறிகொடுக்கும்படியான நிர்ப்பந்தத்தை உருவாக்குகின்றனர். சிறு தெய்வம், குலதெய்வ வழிபாடுகள், திருமணச் சடங்குசாத்திரங்கள், குடும்ப உறவுகள் போன்ற அனைத்தையும் பார்ப்பனமயமாக்குகின்றனர். பௌத்த, சமண, சீக்கிய மதத்தினர் கூட இந்து சமயத்தின் கூறுகள்தாம், அவர்களுக்கென்று தனித்தனி அடையாளங்களும் உரிமைகளும் கிடையாது என மறுக்கிறார்கள். வடஇந்தியாவிலேயேகூட பல பத்து மொழிகளை அழித்து சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்துமொழி திணிக்கப்படுகிறது.

பல்வேறு தேசிய இன மொழிகளும் ஒடுக்கப்பட்டு "இந்திய தேசிய மொழி' என்ற பெயரில் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்திமொழி திணிக்கப்படுகிறது. இந்திய தேசியத்தையும் இந்துத்துவத்தையும் ஏற்காதவர்கள் தேசத்துரோகிகளாகவும், பிளவுவாதிகள், தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி ஒடுக்கப்படுகின்றனர். சுருக்கமாகக் கூறினால், பார்ப்பனரல்லாத அனைத்துப் பிரிவு சாதி, மத மக்கள் மீதும் பார்ப்பன சனாதனத்தைத் திணிக்கும் வகையில் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டு வர எத்தனிக்கிறார்கள்.

சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த, நாட்டு மக்கள் அனைவரின் நலன்களையும் பிரதிபலிக்கக்கூடிய பொதுச் சிவில் சட்டம் என்கிறபோது, மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அவசியமானது, சரியானது என்பதைப் போலத் தெரியும். ஆனால், உண்மையில் அது அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களுக்கானதா, அறிவியல் பூர்வமானதா, நாட்டின் சட்டத்துக்கும், நீதிக்கும் பொருந்தக் கூடியதுதானா என்பதுதான் கேள்விக்குரியது.

நம்பக்கூடாத நம்பிக்கைகள்

பல்வேறு சாதிகளுக்கும், தேசங்களுக்கும், இனங்களுக்கும், மொழிச் சிறுபான்மையினருக்கும் இடையிலான பிரச்சினைகளையும் பிணக்குகளையும் சிக்கல்களையும் அறிவியல்பூர்வமான ஆதார அடிப்படையிலும், சட்டத்துக்கும் நீதிக்கும் உட்பட்டும்தான் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அவ்வாறு தீர்த்துக் கொள்ளவே முடியாதவாறு அரசியல், சமூக, பொருளாதார ஆதாயங்கள் பெறுவதற்காக.

வேண்டி நிரந்தரமான முரண்பாடுகளையும், மோதல்களையும் உருவாக்கி, இரத்தஞ்சிந்த வைப்பதையே தமது திட்டமாகவும், கொள்கையாகவும், நடைமுறையாகவும் சாதி, மத இனவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கொண்டுள்ளன. சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும் புறம்பான பல கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்து பாமரத்தனமான நம்பிக்கைகளை அப்பாவி மக்களிடை÷ய பரப்புகின்றனர்.

பிறகு ""இவையெல்லாம் மக்களின் நம்பிக்கைகள், இவற்றுக்கெல்லாம் அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் தர்க்க நியாயங்களும் கேட்கக்கூடாது. புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும், உபநிடதங்களையும் இன்னபிற மதநூல்களையும் நம்பிக்கைகளையும்தான் ஆதாரமாகக் கொள்ள வேண்டும்'' என்கின்றனர். மறுபுறம் மதச் சிறுபான்மையினர் விவகாரங்களில் வேறு யாரும் தலையிடக் கூடாது என்று இசுலாமிய மற்றும் கிறித்துவ அடிப்படை மதவாதிகள் கோருகின்றனர். குறிப்பாக, ""ஷாரியத்'' முதலிய
முசுலீம் மதவிவகாரங்களை அம்மத குருமார்கள்தான் தீர்மானிக்க முடியும் என்கின்றனர். மொத்தத்தில், தங்கள் மத நம்பிக்கைகளில், மத உரிமைகளில் மட்டுமல்ல, மாற்று மதத்தினருடனான முரண்பõடு, மோதல் விவகாரங்களில் கூட எந்தச் சட்டமும், நீதிமன்றங்களும், அரசும் எப்போதும் தலையிடவோ, முடிவு செய்யவோ முடியாது என்று சாதி, மதவாதிகள் அனைவருமே அடாவடியாக நிற்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ""சாதி, மத, ஆன்மீக நம்பிக்கைகள் எல்லாம் கடவுளால் அருளப்பட்டவை அல்லது கடவுளால் ஓதப்பட்டு தேவதூதர்களால் நமக்கு வழங்கப்பட்டவை. மனிதர்கள் அவைகளைக் கேள்விக்குள்ளாக்கவோ, பகுத்தறிவு கொண்டு அலசி ஆராயவோ, பரிசீலிக்கவோ கூடாது.
அவை நமது முன்னோர்களால், சான்றோர்களால், துறவிகளால் போற்றப்பட்டு, தொன்றுதொட்டு காலங்காலமாக நிலவி வருபவை அல்லது ஞானக் கண் கொண்டு அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை. அவை அறிவியல் ஆதாரத்துக்கு மேலான ஞான அறிவால் ஆனவை. அவற்றின் தாத்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல், இப்போது நாத்திக வாதிகள், மதமறுப்பாளர்கள் மத, ஆன்மீக நம்பிக்கைகளைக் குலைக்க முயல்கிறார்கள்'' என்கிறார்கள். முன்னோர்கள், சான்றோர்கள், துறவிகள், ஞானிகளால் போதிக்கப்பட்ட மத, ஆன்மீக, ஞானபோதனைகள், அருள் வாக்குகள், தரும சிந்தனைகள் என்பவையெல்லாம் அறிவியல்·

சோதனைகளால் நிரூபிக்கப்பட்டவைகள் கிடையாது. மனிதனுக்கு ஞானக்கண், நெற்றிக்கண் என்றெல்லாம் மூன்றாம் கண் யாருக்கும் கிடையாது. நல்ல பார்வை கொண்ட கண், ஊனக்கண் என்று இரண்டு வகைகள்தாம் உள்ளன. இரண்டுக்கு மேலே கண்களோ, கைகளோ, ஒன்றுக்கு மேல் தலைகளோ, மனிதக் கூறுகளல்லாத விலங்குக் கூறுகளைக் கொண்ட உடல் உறுப்புகளோ இருந்தால் அது தெய்வப் பிறவி என்று யாரும் கொண்டாடுவதில்லை. உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்த முயல்வதுதான் பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருக்க முடியும். இப்படிச் செய்வதுதான் நடைமுறையாக உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல; கடந்த பத்து நூறாண்டுகளுக்கு முன்பு கூட உலகின் எல்லா சான்றோர்களும், ஞானிகளும், துறவிகளும் ஒன்று சேர்ந்து பெற்றிருந்த அறிவின் வளர்ச்சி நிலை கூட இன்றைய மனித சமுதாயத்தின் அறிவு நிலையை விடப் பல மடங்கு தாழ்ந்ததாகவே இருந்தது. தவ வலிமையால் மனிதன் அறிவைப் பெற முடியும் என்பதும்கூட அறிவின் வளர்ச்சி பற்றிய அறிவீனம்தான். மருத்துவம், எண் கணிதம், அபாகஸ், வானியல் போன்று பட்டறிவு கொண்டு முன்னோர்கள் உருவாக்கிய அனுபவவாத அறிவியல் கூட நவீன அறிவியல் சோதனைகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, வெறுமனே நம்பிக்கைகளின் அடிப்படையில் எடுத்தாள முடியாது.

பழைய நம்பிக்கைகளை அப்படியே ஏற்பது என்றால், பூமி தட்டையானதென்றும், பூமியைச் சூரியன் சுற்றி வருகிறதென்றும் நாம் ஏற்க வேண்டும்; இடி, மின்னல், மழை, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளுக்குச் சொல்லப்படும் புராண, இதிகாச புனைச் சுருட்டுகளை நம்ப வேண்டும்; கொடிய நோய்களுக்கு நவீன மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கூடாது; தர்க்காவுக்குப் போய் மந்திரிக்க வேண்டும்; கிறித்துவச் சபைகளுக்குப் போய் ஜெபம் செய்ய வேண்டும்; அம்மனுக்குப் பூசைகள் போட வேண்டும்.

14ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான், ஐரோப்பாவில் கிறித்துவத் திருச்சபைகளுக்கு எதிரான கலகமும், லுத்தரன், கால்வினியப் புரட்சிகளும் வெடித்தபிறகுதான், பழைய மத, ஆன்மீக நம்பிக்கைகளைத் தகர்த்த பிறகுதான் உலகில் அறிவியல் புரட்சி நடந்தது. மனித சமுதாயம் அறிவியல் யுகத்துக்குள் நுழைந்தது. அச்சு எந்திரமும், நீராவி எந்திரமும் அவற்றைத் தொடர்ந்து தொழிற்புரட்சியும் நவீன உலகத்தைப் பிரசவித்தன.

அதற்கு முந்தைய மனித சமுதாயம் எவ்வளவுதான் ""சாதித்திருந்தாலும்'' இயற்கையின் ஒரு அங்கமாக, இன்னொருவகை ""பிராணிக் கூட்டமாகத்''தான் இருந்தது. அதாவது மனித சமுதாயம் அப்போது நிலவிய இயற்கைச் சூழலில் தன்னைத் தானே அப்படியே மறு உற்பத்தி செய்து கொள்வதற்கு மேலான எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை. அறிவியல் மற்றும் தொழிற்புரட்சியின் மூலம் இயற்கை நிலையில் இருந்து பிரிந்து, நீட்டிக்கப்பட்ட மறுஉற்பத்திக்குள் நுழைந்த பிறகுதான் நவீன, அறிவியல்பூர்வமான பகுத்தறிவு வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தது.

அறிவியல் ஆதாரமற்ற வரலாற்றுப் புரட்டு

மேற்படி பழமைவாதிகள் ""புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் ஆகியன உண்மையில் நிகழ்ந்த வரலாறுகள்'' என்று சாதிக்கிறார்கள். இவையெல்லாம் கற்பனைப் புனைவுகள்தாமே தவிர வரலாற்று நிகழ்வுகள் என்று கருதுவதற்கான அடிப்படை ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. தொல்லியல் ஆய்வு, அகழ்வாராய்ச்சி, மாந்தவியல் போன்ற நவீன அறிவியல் ஆதாரங்களின்றி சொல்லப்படும் எந்தவொரு நிகழ்வையும் வரலாறென்று ஏற்க முடி யாது. இதுதான் சட்டமும், நீதியும், சமூகமும் ஏற்கக்கூடியது. இதற்கு மாறாக, புராணங்களில், காப்பியங்கள்இலக்கியங்களில் வரும் கதைநாயகர்கள், நிகழ்வுகள் எல்லாம் வரலாற்று உண்மைகள், அவர்கள் பிறந்த, வாழ்ந்த, போர்புரிந்த பூமி இவைதான் என்று கூறிக் கொள்வது அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல் உரிமை பாராட்டுவதாகும்.

இதுதான் ராமன் அவதரித்த அயோத்தி, இங்குதான் தசரதன் அரசõண்டான்; இதுதான் மதுராபுரி, இங்குதான் கண்ணன் பிறந்து, வளர்ந்து, லீலைகள் புரிந்தான்; இன்றைய குருச்சேத்திரம்தான் மகாபõரதப் போர் நடந்த இடம்; இன்றைய இலங்கைதான் இராமயாணத்தில் வரும் லங்காபுரி; லங்காபுரிக்குச் செல்வதற்காக அணில்களின் உதவியோடு ராமன் கட்டிய பாலம் இங்குதான் இருக்கிறது என்று அடையாளங் காட்டுவதும், இதோ இங்கே ராமலட்சுமணன் கால் பதித்துள்ளார்கள், அதோ அங்கே ராமனும் சீதையும் பள்ளிக் கொண்டிருந்தார்கள் என்று தலபுராணங்கள் கூறுவதும் தொல்லியல் ஆய்வும், அகழ்வராய்ச்சியும் கொண்டு அறிவியல் ஆதாரப்படி நிறுவப்படாதவரை உண்மை என்று ஏற்க முடியாது.

ஆனால், அறிவியல் ஆதாரப்படி நிரூபிக்கப்படாமலேயே பாபரி மசூதி இருந்த இடம்தான் ராமன் பிறந்த அயோத்தி என்று கூறி மசூதியை இடித்தார்கள். இதேபோல 30000 மசூதிகளையும் வேறு பல கிறித்துவ ஆலயங்களையும் உரிமைபாராட்டி அவற்றையும் இடிக்கத் துடிக்கிறார்கள். இதிகாச காலத்தில் ராமன் கட்டிய பாலம் இருப்பதாகக் கூறி சேது கால்வாய்த் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

பார்ப்பனக் கடவுளர்களின் புராணங்கள், இதிகாசங்கள் மட்டுமல்ல, தமிழர் கடவுள்கள் எனப் போற்றப்படுபவர்களின் சிவபுராணம், கந்தபுராணம் போன்வற்றைக்கூட இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். இதுதான் சொக்கனும் மீனாட்சியும் மணமுடித்த மதுரை என்றோ, வங்கக் கடலோரம் அமைந்துள்ள இந்தத் திருச்செந்தூரில்தான் சூரபதுமனை முருகன் அழித்தான் என்பதெல்லாம் கூட தற்போதுள்ள வரலாற்று ஆதாரங்களுக்கு மாறானவை. கடல் கோள்கொண்ட தென்மதுரையும் இருந்தது; முன்னொரு காலத்தில் வங்கக் கடற்கரையில் இந்தத் திருச்செந்தூர் இருந்திருக்க முடியாது; இந்த உண்மைகள் மேற்படி தலபுராணங்களை மறுக்கின்றன.

கடல்கொண்ட பூம்புகார் இருந்ததை அகழ்வாராய்ச்சி நிரூபித்தால் கூட இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரப்படி கண்ணகி மதுரைøய எரித்ததாகவும், மேலுலகம் சென்றதாகவும் கூறப்படுவதை பகுத்தறிவுள்ளவர்கள் யாரும் ஏற்கக் கூடியதில்லை. இந்துமத புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் மட்டுமல்ல, கிறித்துவ மதத்தின் பைபிள் கதைகளும், முஸ்லிம் மதம் போற்றும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போதனைகளாக ஏற்படும் ஹத்தீசுகளும் கூட அறிவியல் ஆதாரப்படி நிரூபிக்கப்படாதவரை ஏற்கக் கூடியவை அல்ல.

பகுத்தறிவுள்ளவர்களின் சமூகக் கடமை

இவ்வாறு மத, ஆன்மீக நம்பிக்கைகளை ஏற்க மறுப்பதும், அவற்றுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் கேட்பதும், கோடானு கோடி மக்களின் நம்பிக்கைகளை மறுப்பதாகும், அவர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்கிறார்கள். அப்படி மக்களின் பெயரால் சிறப்புரிமை கோருபவர்கள் மத, ஆன்மீகத் தேவைகளுக்காக அப்படிச் செய்வதில்லை. இந்துமதவாதிகள் என்றால் இராமராஜ்ஜியம் நிறுவுவதற்காக சூலாயுதம் ஏந்துவோம்;
முஸ்லீம் அடிப்படைவாதிகள் என்றால் அல்லாவின் ஆட்சியை நிறுவுவதற்காகப் புனிதப்போர் (ஜிகாத்) நடத்துவோம் என்கிறார்கள். உண்மையில் இவர்களெல்லாம் ஒரு சிறு கும்பலின் அரசியல் ஆதாயத்துக்காக மக்களின் மத நம்பிக்கைகளையும் மத உணர்வுகளையும் கேடாகப் பயன்படுத்துகிறார்கள். அதற்காகத்தான் மத அடிப்படையிலான முரண்பாடுகளை சிக்கல்களை தீர்க்கவே முடியாதவாறு பிரச்சினைகளையும் மோதல்களையும் முடிவின்றி வளர்த்துக் கொண்டே போகிறார்கள். இவையெல்லாம் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் பிரச்சினை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று படித்த பாமரர்களே ஒதுங்கிக் கொள்வதும், பொது மக்கள் குறுகிய சாதி, மத, சமூக, உணர்வுகளுக்குள் மூழ்கிக் கிடப்பதும் மேற்படி சுயநல சக்திகளுக்கு வசதியாக அமைகிறது. இதனால் மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், தேசிய நலன்களுக்காகத்தான் தாம் பாடுபடுவதாகவும் நம் அனைவரது பிரதிநிதியாகத் தம்மைக் கட்டிக் கொண்டும் ஆதாயம் அடைகிறார்கள். அறிவியல் அறிவு என்பது படித்த பாமர மக்களின் வேலைவாய்ப்பு, நுகர்பொருள் போன்ற வாழ்க்கை வசதிக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது. அது பொதுமக்கள் அனைவரின் வாழ்க்கைக் கண்ணோட்டமாகவும் சமூகப் பார்வையாகவும் மாறும் பொழுதுதான் அச்சுயநலமிகளின் முயற்சிகளை முறியடிக்க முடியும்.

சமுதாய வாழ்வில் புதுப்பங்கும் பொறுப்பும் ஏற்கவிருக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு மாபெரும் சமூகக் கடமை இருக்கிறது. மேலை நாடுகளின் கணினி வேலைக்கும், பன்னாட்டு வங்கிகளுக்கு சந்தை பிடிக்கும், பன்னாட்டுத் தொழில் கழகங்களின் நுகர்பொருள் விற்பனைக்கும் கூலி அடிமைகளாகி விடுவதையே வாழ்வின் இலட்சியமாகக் கொள்ளக்கூடாது. அந்நியர்களின், அவர்களின் தரகு முதலாளிகளின் தொழில் மூலதனப் பெருக்கமும், அவர்கள் தரும் வேலைவாய்ப்புகளுமே நாட்டின், சமுதாயத்தின் முன்னேற்றம் என்று கருதக்கூடாது.

14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மத, சமூக, இனப் பிற்போக்குகளுக்கு எதிராக வெடித்த கலகங்கள், அறிவியல் தொழிற்புரட்சியைத் தொடர்ந்துதான் அந்நாடுகள் வெகுவாக முன்னேறின. அந்நாடுகளின் சமூகங்கள் அனைத்தும் பழமையைத் தூக்கி எறிந்து மறுவார்ப்புச் செய்யப்பட்டன. ""மேலைநாடுகள் அறிவியல், அரசியல், பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கலாம், நாம் மத, ஆன்மீகத்தில் முன்னேறியிருக்கிறோம்'' என்ற தற்பெருமையில் நமது நாடும் சமுதாயமும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.
..
இந்த மாயையை விலக்கி, பழமையை தூக்கி எறிந்து நமது நாட்டையும், சமுதாயத்தையும் மறுவார்ப்பு செய்ய வேண்டுமானால் அறிவியக்கமும் அறிவியல் புரட்சியும் அவசியமாகி உள்ளன. ஒரு மாபெரும் அறிவியல் புரட்சி, அறிவியக்கத்தின் மூலம் பழமைவாதங்களை வீழ்த்துவோம்!
புதிய பகுத்தறிவுச் சமுதாயத்தைப் படைப்போம்!


முதற்பதிப்பு:
மார்ச் 2008 ·
..
வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
..
நன்கொடை : ரூ. 3.00
..
தொடர்புக்கு:
ச. பரமானந்தம்,
90, பாரதி தெரு, பாத்திமா நகர்,
நாஞ்சிக் கோட்டை சாலை,
தஞ்சாவூர் 613 001. ·

Friday, April 4, 2008

இவர் தான் லெனின்



1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்
2. வறுமையை ஒழித்த லெனின்
3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்
4. வக்கீல் உருவில் ஒரு போராளி!
5. லெனின் தேர்வு செய்த பாதை
6. போராட்டமே வாழ்க்கையாக...!
7. சைபீரியச் சிறைவாசம்
8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்
9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்
10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி
11. சதியை முறியடித்த லெனின்
12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி
13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்...
14. எதிரிகளை வீழ்த்திய செம்படை
15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்
16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்
17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல...

வெளியீடு:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை
இணைப்பு