Saturday, February 28, 2009

இந்தியாவில் வேறு எங்கும் இல்லை! இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான்!!கலைஞர் ஆட்சியில்....

 • ஈழத்தமிழ் மக்களை கொன்றொழிக்கும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசின் நம்பகமான ஒரே காவலர் & ஒரே கூட்டாளி!
 • கல்லூரிகளை காலவரையின்றி மூடி மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த ஒரே தமிழனத் தலைவர்!

 • சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிசட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்! ஈழ மக்களின் எதிரி, பார்ப்பனத் திமிர் பிடித்த சு.சாமியை தாஜா செய்ய தி.மு.க அரசின் அடியாள் வேலை!

 • ஒரு நாளைக்கு ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் அடிமை சாசனத்தில் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்து போட்டு விரைவாக நாட்டை விற்கும் ஒரே ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி!
 • 123 அடிமை சாசனத்தின் நிரந்தர அடிமை!
 • காலை 4 மணி எழுந்து அயராது உழைத்து, இதுவரை இந்தியா கண்டிராத பிரம்மாண்டமான கொள்ளை! ஸ்பெக்ட்ரம் சுவாகா ரூ 60,000 கோடி!!
 • இந்தியாவிலேயே அதிக மக்களை வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளி தமிழகம் தொடர்ந்து முதலிடம்!


 • முரசொலி, எதிரொலி, சிரிப்பொலி, இசையருவி, கலைஞர் செய்திகள் என சில வினாடிகளில் தங்களது சுவிஸ் வங்கி பணத்தை ஆடம்பரமாக செலவிடும் ஏழை திரைக்கதை ஆசிரியர்!
 • கால்ஸ் சாராய ஆலைகள் போல பல ஆலைகளுடன் கைகோர்த்து கொண்டு இந்தியாவிலேயே சாராய விற்பனையில் தமிழக அரசு கடைகள் தொடர்ந்து முதலிடம்! • குஜராத் இனப்படுகொலையினை ஆதரித்து மெளனம் காத்தவர்!
 • பாசிச காங்கிரசோடும், இந்துவெறி பார்ப்பன பாசிச பாஜகவோடும் மாறி மாறி கூட்டணி கட்டிக் கொண்டும், 'முற்போக்கு & மதச்சாற்பற்றவர்' என தம்மை காட்டிக்கொண்டும் "தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்கசாதி வெறியர்களால் தாக்கப்படுவதில்" இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து முதலிடத்தில் வைத்திருப்பவர்!

 • அழகிரி, தளபதி, கனிமொழி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, உதயநிதி ஆகிய தமிழக மக்களின் நலன்களுக்காக தள்ளாத வயதிலும் பாடுபடும் ஒரே தாத்தா!

வெளியீடு: தமிழக உழைக்கும் மக்கள்

ஈழத் தமிழ் மக்களை கொன்றொழிக்கும் இனவெறிப்போரில் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கு எதிராக போராடுவோம்!Tuesday, February 24, 2009

குடி - கொண்டாட்டம் - கும்பாபிஷேகம்! போலி கம்யூனிஸ்டுகளின் அதிரடி வியூகம்!!
கடந்த மாதம் 31ம் நாள் முத்துக்குமார் தன்னையே எரித்துக்கொண்டதும் அந்த தீ தமிழகமெங்கும் ஈழத்தமிழர்களுக்காக போராட்டமாக பற்றி பரவியது. ஆனால் சென்னை நெற்குன்றம் பகுதியிலோ வேறு வகையான தீ எரிந்து கொண்டு இருந்தது. என்ன அது என எட்டிப்பார்த்தா, அந்த தீ கோவில் கும்பாபிஷேகத்திலிருந்து எழுந்து வந்தது. உற்று பார்த்தபோது இந்த கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டு இருந்தவர் சிபிஎம் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி அவர்கள்.

முத்துக்குமார் உடல் எரிக்கப்பட்டதருணத்தில் இந்த வெள்ளைச்சாமி கோவிலில் யாகத்தில் தீயிட்டு நடத்திக்கொண்டு இருந்தார். கொளத்தூரில் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் தமிழகமே அணிதிரட்டபோது இந்த வெள்ளைச்சாமி ஆட்டோவில் ஓம்சக்தி! பராசக்தி! என முழங்கிகொண்டு இருந்தார்.

முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவருடைய நினைவினை நெஞ்சில் ஏற்று ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து முறியடிக்க புரட்சிகர சக்திகள் மக்களை அறைகூவி அழைத்துக்கொண்டுயிருந்தபோது, இந்த வெள்ளைச்சாமி டாஸ்மாக் சரக்கினை ஏற்றிக்கொண்டு 'பகுதிவாழ் மக்களே கோவில் பிரசாதத்தை வாங்கி சென்று அம்மன் அருளை பெற்றுச் செல்லூங்கள்' என அழைத்துக்கொண்டுயிருந்தார்.

இவையனைத்தையும் விட 'மார்க்சிய கொள்கை உறுதியோடு மக்கள் உணர்வை நிறைவேற்றிய மக்கள் ஊழியனே! நீர் பல்லாண்டு காலம் வாழ்க!!' என்ற டிஜிட்டல் பேனரில் வெள்ளைச்சாமி பல் இழித்ததை தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மார்க்சியம், பகுத்தறிவு என்ற வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு பக்தி பரவசம் ஆடுவதும், 'சந்தை சோசலிசம்' என கூறிக்கொண்டு சிங்கூர்,நந்திகிராமில் மக்களை படுகொலை செய்வதும் என இந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தங்களது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருகின்றனர்.

புரட்சிகர சக்திகளான நாம், இவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் எதிரிகளை முறியடிக்க முடியாது.

Monday, February 23, 2009

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிச் சட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது

காக்கிச் சட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்!

தடுக்க வந்த நீதிபதிகளுக்கும் தடியடி!!

 • ஈழமக்களின் எதிரி, பார்ப்பன திமீர் பிடித்த சு.சுவாமியை தாஜா செய்ய திமுக அரசின் அடியாள் வேளை!
  உழைக்கும் மக்களே!
 • இது வக்கில் - போலீசு மோதல் அல்ல! சு.சுவாமி கும்பலுக்கும், சுயமரியாதையுள்ள தமிழர்களுக்குமான போராட்டம்!
 • பார்ப்பன கும்பலுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மோதல்!மோதுவோம்! எதிரிகளை வீழ்த்தும் வரை!!

Saturday, February 14, 2009

புரட்சிகர கவிதைகள் 3 : "மானங்கெட்ட மன்மோகன் சிங் பேசுகிறேன்"வாழ்வழியில்லாமல் வறுமையில் உழல்பவரே
பத்துபேர் வாழ்ந்திட லட்சம் பேர் வாடிட
ஆதரிப்பீர் சோனியாவின் வளர்ப்பு நாயான என்னை

ஆட்ம் ஸ்மித்தின் அடியேன் நான்
மக்களே 'மார்க்ஸை மறுத்து ஆடம் ஸ்மித்தை
நெஞ்சில் நிறுத்து !

தொழிலாளி மாளலாம். முதலாளி வாடலாமா?
ஆட்டு மந்தைகளே ஆதரிப்பீர் வறுமை
கொட்டகையில் உங்களை அடைத்திட முயலும்
மன்மோகன் சிங்காகிய என்னை

மகாராஷ்டிராவில் விவசாயிகள் 1 லட்சம் பேர்
வறுமையில் தற்கொலை செய்து கொண்டார்களாமே
நல்லது மிகவும் நல்லது. அப்போதுதான்
மக்கள் தொகை குறைந்து பொருளாதார வளர்ச்சி
ஏற்படும்
பொய்யில்லை, சீனாவில் பல மணி நேரம்
வேலைவாங்கியே மக்களை கொல்கிறது அரசு
நாங்கள் அப்படி செய்யாமல் இளைஞர்களை
கனவு காண சொல்லித்தான் சாகடிக்கிறோம்
சந்தேகம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்
அப்துல்கலாமை அற்புதம் அற்புதம் என்பார்

மக்களே "பங்கு சந்தை சரிவாம்
பதறுகிறது என் நெஞ்சம்
என் எஜமான் அம்பானியின்
கோடிகள் குறைந்திடுமே

என் தியாகமே விலைவாசியை தாங்கிடும்
சகிப்புத்தன்மை உன்னிடம் உண்டு
அதனை மேலும் மேலும் உயர்த்திடும்
சூத்திரம் என்னிடம் உண்டு

வாங்க வக்கில்லாமல் நீ இருக்கலாம்
வக்கிருக்கும் அம்பானியின் பெரும் இலாபம்
குறையலாமா?

ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரிக்க சில லிட்டர்
கச்சா எண்ணெய்யை பயன்படுத்தும் நாம்
அதில் தவறு காண்பதில்லை.
ஓர் அம்பானியை உருவாக்கிட 7 ஆயிரம் ஏழைகளை
உருவாக்குவதை தவறு எனலாமா?

தவறு என்கிறார்கள் நக்சல்பாரிகள்
என்ன அநியாயம் பாருங்கள்
முட்டாள் மக்களே! ரஷ்ய நாட்டில் லெனின் என்ற
பயங்கரவாதி அப்பாவி பணக்காரர்களின் சொத்துக்களை
பறித்து கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கொடுத்தானாம்
அந்த அநியாயத்தை காட்டுமிராண்டிதனம் என்றும்
லெனின் ஒர் முட்டாள் என்றும் மகாகவி பாரதியார்
முழங்கினார்.

லெனினை போன்றே இந்த நக்சல்பாரிகள், அப்பாவி
முதலாளிகளான டாடா, பிர்லா, ரிலையன்ஸ் அம்பானி
போன்றவர்களின் சொத்துக்களை பறித்து கஞ்சிக்கு
இல்லாதவர்க்கெல்லாம் கொடுக்க போகிறார்களாம்.

இன்று இதனை பழிக்க பாரதியார் இல்லாமல்
போகலாம், ஆனால் சி.பி.எம் இருக்கிறார்கள்
ஆகையால் ஜெனங்களே! ஜனநாயகத்தை காத்திட
பணநாயகர்களை வளர்த்திட ஆதரிப்பீர்
பார்ப்பன-பனியாக்களின் பிரதிநிதியான என்னை!

ஏமாளி கூட்டமே! என் ஆசை காதலன்
கொலைகார ஜார்ஜ் புஷ் நம் தேசத்தின் மீது
தீரா காதல் கொண்டிருக்கிறார்.
காரணம்? வேறொன்றுமில்லை.
சந்தை பொருளாதாரத்தின் சொர்க்கமாய் இந்தியாவை
அவர் பார்க்கிறார்.
பார்த்துக்கொள்ளுங்கள், புஷ் மாதிரியான நல்லவர்களுக்கு
சொர்க்கம் பிடிக்கத்தானே செய்யும்

ஏ... தலையாட்டி மொம்மைகளே! சந்தை பொருளாதார்
சொர்க்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்யமே இந்திரன்
டாடா, பிர்லா, அம்பானி பொன்ற தேவர்களும் உண்டு
இவர்களுக்கு சேவை செய்யவெ உங்களை
இறைவன் படைத்திருக்கிறார்.
சந்தேகம் என்றால் கேட்டுப்பாருங்கள் அப்துல்கலாமை
அற்புதம் அற்புதம் என்பார்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
அமெரிக்காவை பிடிக்காதவர்கள் நரகத்தில் வாடுகிறார்கள்.
ஆம், குவாண்டநாமோ, அபுகிரைப் சிறைசாலைகள்தான்
நகரம்.

அடிமைகளே! வரலாற்றை புரட்டி பாருங்கள்
கம்யூனிச பூதம் படம் எடுத்து ஆடிய சோவியத்
யூனியனில் 30 ஆண்டுகளில் 5 கோடி
பயங்கரவாதிகளை கொன்றோம்
அதன் தொடர்ச்சியாய் அப்பூதம் ஆடிய
வியட்நாமில் 20 லட்சம் பயங்கரவாதிகளை கொன்றோம்
வடகொரியாவில் 30 லட்சம் பயங்கரவாதிகளை கொன்றோம்

மங்கு மக்களே! ஈராக்கை பாருங்கள் 20 லட்சம்
பெண்களை விதவைகளாகி விட்டோம்.
ஆப்கானை பாருங்கள் அடித்து நொருக்கி விட்டோம்
புரிந்துகொள்ளுங்கள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமே இவ்வுலகின் தலைவன்
ஏற்காவிட்டால் உங்களுக்கும் எமன்!

சுமைதாங்கிகளே! அடிமை சாசனம் எழுதிதந்துவிட்டேன்
அமெரிக்காவிற்கு பெருமையாய் இருக்கிறது.
என் முன்னோர்கள் காந்தியும், நேருவும் போட்ட துரோக
பாதையில் நான் சரியாக போகிறேன் என்பதை
நினைக்கும் போது.

இப்படியே போனால் 2020 ல்
இந்தியா வல்லரசாய் ஆகிவிடும்.
சந்தேகம் கேட்டுப்பாருங்கள் அப்துல்கலாமை
அற்புதம் அற்புதம் என்பார்.

கடைசியாக,
ஏகாதிபத்தியம் வாழ்க,
அவற்றின் ஒட்டுண்ணி தரகு முதலாளி வர்க்கம் வாழ்க,
தாராளமயம், தனியார்மயம், உலகமையம் என
என் பிள்ளைகள் வாழ்க, ஏகாதிபத்திய மூலதனம் வீங்கி பெருக,
அவற்றினால் இந்த்ய ஏழைகளை ஒழித்து
பணக்கார இந்தியாவை உருவாக்க ஆதரிப்பீர்
ஆளும்வர்க்க நாயான என்னை!

புரட்சிகர கவிதைகள் 2 : "யார் இந்த மகாத்மா?"வாழ விரும்பிய மக்களை
வாழ்க்கை தளத்தில் இருந்து
வழுக்கி விடவே வழுக்கை தலை.

இந்திய சமஸ்தானங்களில் சாதியை ஒழிக்க
ஈ.வெ.ராமாசாமிகள் உருவாகிவிடக்கூடாது என்பதை
ஊடுறுவி பார்க்கவே மூக்கு கண்ணாடி

பார்ப்பன பன்னிகளின் அருமை பெருமைகளை
பேசுவதற்கே பற்களற்ற பொக்கை வாய்.

பிர்லாவின் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டே
இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை
நெறிப்பதற்காகவே நீண்டு வளர்ந்த
இரு கைகள்

உழைக்கும் மக்களின் விடுதலை போராட்டத்தை
அடக்கி ஒடுக்கவே கையில் கைத்தடி

குஜராத் பனியாக்களின் சொத்துக்களையும்
இந்திய நிலப்பிரபுக்களின் நிலங்களையும்
உழைக்கும் மக்கள் பறித்துவிடுவார்கள்
என்பதற்காகவே, தன்னை பின்பற்ற கோரி
ஒரு முழவேட்டியை உடலில் சுற்றி கொண்ட
எளிமையின் உருவம்,

வெள்ளை எசமானர்களுக்கு சிம்மசொப்பனமாய்
திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின்
கழுத்தை முறித்த துக்குகயிறை பார்த்து
புன்னகைத்த முகம்

உலகம் கடவுளுக்கு கட்டுபட்டது
கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுபட்டது
இதனை அன்றே சொன்னான் மனு

ஆம்
மக்கள் கடவுள்கள்
காந்தி என்ற மந்திரத்துக்கு கட்டுபட்டவர்கள்
காந்தி என்ற மந்திரமோ பார்ப்பன-பனியாக்களுக்கு
கட்டுபட்டது.
புரிகிறதா?
மணுதர்ம குப்பையில் உருபெற்று எழுந்த
20ம் நூற்றாண்டின் மனுதான்
பொக்கைவாய் காந்தி
அவனின் மக்கள் விரோத பாசிச செயல்களுக்கான
பட்டம்தான் 'மகாத்மா' என்பது

மொத்தத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில்
தங்களை அர்ப்பணித்து கொண்ட மாவீரர்களை
வெள்ளையனிடம் காட்டி கொடுக்கும் துரோக
கதாபாத்திரம் தான்
மகாத்மா காந்தி

வரலாறுதோறும் அந்த துரோகம் மீண்டும் மீண்டும்
உருபெற்று எழ முயலும்
நாம் அது உருபெற்று எழும் மனுதர்ம குப்பையை
சோசலிச தீயிட்டு கொலுத்துவோம்
மாமேதை மார்க்ஸ் நமக்கு இதனைத்தான்
கற்பிக்கிறார்.

Friday, February 13, 2009

ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை முற்றுகை - படங்கள்!
ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டது. இந்தியாவின் இராணுவ அமைப்பையே எதிர்த்து மாணவர்கள் போராடியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற போலீசு உடனே வந்து போராட்டத்தை நிறுத்துவதற்கு முயன்றது. ஆனால் மாணவர்கள் உறுதியாக நின்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.


..
திருச்சி அரசு சட்டக்கல்லூரியின் மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட இணைச் செயலாளருமான த.கிளர்ச்சியாளன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பு.மா.இ.மு வின் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். உருமு தனலட்சுமி கல்லூரி பு.மா.இ.முவின் கிளைச் செயலாளர் சங்கத்தமிழன் கண்டன உரையாற்றினார். கல்லூரி திறந்த அன்றே இந்த போராட்டத்தை நடத்தியதைக் கண்டு அஞ்சிய போலீசு முன்னணியாளர்களை கைது செய்வதற்கு திட்டம் தீட்டியிருப்பதாக தெரிகிறது. மாணவர்களும் இதை எதிர்பார்த்து போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கும் தயாராகி வருகின்றனர்.

Thursday, February 12, 2009

புரட்சிகர கவிதைகள் 1 : "இரு வகை கவிதைகள்"


உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாதை
அமைத்த மாமேதை மார்க்ஸ் போராட்ட கவிதை
வாழ்நாள் முழுவதும் மார்க்ஸை துரத்திய
வறுமை துயரத்தின் கவிதை

மாமேதை மார்க்சின் ஏங்கெல்ஸ் நட்பின் கவிதை.
மார்க்ஸிய எதிரி புருனே பழமைவாதத்தின் கவிதை.
மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் மார்க்சியம் தத்துவ கவிதை
கொலை,கொள்ளை,கற்பழிப்பு, திருட்டுத்தனம்
விபச்சாரம், சுயநலன், மூடநம்பிக்கை என
மனித அவலங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம்
அருவறுப்பின் கவிதை.

பெண்ணியத்திற்கே முன்னுதாரணம் தந்த
மார்க்ஸின் ஜென்னி பண்பின் கவிதை
கணவன் இருக்க மாற்றான் இராவணனுக்கு
மடிவிரித்த இராமனின் சீதை கழிச்சடையின் கவிதை.

உலகை குலுக்கிய ரஷ்ய சோசலிச புரட்சி
சரத்திரத்தின் கவிதை
அதை சீரழித்த குருஷேவ் கும்பலின் எதிர்ப்புரட்சி
வக்கிரமான முதலாளியத்தின் மீட்சி கவிதை


உலகின் முதல் சோசலிச புரட்சியின் நாயகன்
லெனின் நடைமுறை கவிதை
மூன்றாம் அகிலத்தின் மார்க்சிய துரோகி காவுட்ஸ்கி
பிற்ப்போக்கின் கவிதைலெனினின் கனவை நனவாக்கிய, பாசிச ஹிட்லருக்கு
பாடை கட்டிய மாமேதை ஸ்டாலின்
பாட்டாளி வர்க்க சர்வாதிகார கவிதை
மார்க்சியன் என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தை
கற்பழிக்க முயன்ற துரோகி ட்ராட்ஸ்கி
ஓடுகாலி கவிதை

ஆசியாவின் நோயாளி சீனாவை செஞ்சீனாமாய்
மாற்றிகாட்டிய மாமேதை மாவோ
சீனவானின் சிவப்பு நட்சத்திரத்தின் கவிதை
சீனாவில் மாவோவின் கல்லறையிலேயே சோசலிசத்தை
குழித்தோண்டி புதைத்த துரோகி டெங் சியாவோ பிங்
சி.பி.எம்.மின் குருத்துவத்தின் கவிதை.

அமெரிக்க-பிரெஞ்ச்-ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்கு
மரண அடி கொடுத்து மீண்டு எழுந்த
ஹோசிமினின் வியட்நாம் பினிக்ஸ் கவிதை
வியட்நாமில் புரட்சியாளர்களை எதிர்க்க
துப்பில்லாமல் டயாக்சின் இராசாயன குண்டுகளால்
20 இலட்சம் வியட்நாமிய உழைக்கும்
மக்களை கொன்றுபோட்ட அமெரிக்கா
பயங்கரவாத்தின் கவிதை

அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பணமாய்
திகழும் ·பிடல் காஸ்ட்ரோ துடிப்பின் கவிதை
50 ஆண்டுகால பொருளாதார தடைகளால் கியூபாவை
சீரழிக்கும் அமெரிக்க பயங்கரவாதம் வயிற்றெரிச்சலின் கவிதை

ஸ்டாலின் காலத்து கிழக்கி ஐரோப்பா
சோசலிசத்தின் கவிதை
அமெரிக்க கைப்பாவை மேற்கு ஐரோப்பா
ஆக்கிரமிப்பின் கவிதை

பெண்ணடிமைத்தனமும், சுரண்டலும் அற்ற
தாய்வழி சமுதாயம் தூய்மையின் கவிதை
மனித அவலங்களை ஈன்றெடுத்த தந்தை வழி
சமுதாயம் சுரண்டலின் கவிதை

கடவுள் மனிதனை படைத்தான் என்ற கருத்துக்கு சவக்குழி
தோண்டிய சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் கவிதை.
மனிததோற்றத்தை பொய்யாலும், புரட்டாலும் இழிவுபடுத்தும்
பைபிளின் ஆதியாகமம் மூடனின் கவிதை.

தேசிய இன விடுதலை போராட்டத்தை நடத்திகொண்டிருக்கும்
ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீர், அசாம் தொடர் கவிதைகள்
அத்தீம்பிழம்புகளை அணைக்க முயலும் இலங்கை,
இஸ்ரேல், இந்திய ஆளும்வர்க்கம் விட்டில் பூச்சிகளின் கவிதை

இடைகாலத்தில் பார்ப்பீனியத்துக்கு மரண அடி கொடுத்த
புத்தம் கொடுமைக்கு எதிரான கவிதை.
அதனை கொன்றுபோட்ட பார்ப்பன கூட்டம்
வஞ்சகத்தின் கவிதை


23 வயதில் தாய்மண்னின் விடுதலைக்காக தூக்குகயிறை
முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் தன்மானத்தின் கவிதை
வெள்ளை துறையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து
விடுதலை போராட்டத்துக்கு துரோகமிழைத்த
பாரதி கோழைத்தனத்தின் கவிதை.

பார்ப்பனியத்தையும், அதன் மிதவாத வடிவமான
காந்தியிசத்தையும் இறுதிவரை எதிர்த்த
டாக்டர் அம்பேத்கார் சாதி ஒழிப்பின் கவிதை
துரோகத்தையே அரசியலாக்கி
துரோகத்தையே அஹிம்சையாக்கி, துரோகத்தையே விடுதலை
போராட்டமாக்கிய இந்திய உழைக்கும் மக்களுக்கு
துரோகமிழைத்த பொக்கைவாய் காந்தி துரோகத்தின் கவிதை.


தன்மானத்தை தமிழனுக்கு ஊட்டிய கலககார கிழவன்
பெரியார் சுயமரியாதையின் கவிதை.
பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்த அண்ணாதுரை
பிழைப்புவாதத்தின் கவிதை.

உழைக்கும் மக்களின் விளையாட்டான கபடி
வீரத்தமிழின் கவிதை
பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை வேட்டை
காடாய் மாற்றும் ஏகாதிபத்திய கிரிக்கெட்
இளைஞர்களை சீரழிக்கும் போதை கவிதை.

இந்திய ஆளும்வர்க்கத்தை அதிரவைத்த தெலுங்கானா
போராட்டம் இந்தியாவின் சோசலிச தாகத்தின் கவிதை.
அதனை ஈவுயிரக்கமில்லாமல் ஒடுக்கிய பண்டித
நேரு பாசிசத்தின் கவிதை

உலகை அதிரவைத்த நக்சல்பாரி பேரெழுச்சி
வசந்தத்தின் இடிமுழக்க கவிதை.
அதனை இரத்தத்தால் முழ்கடித்த
இந்திய அதிகாரவக்கம்-சி.பி.எம்.மின் துரோகம்
கம்யூனிச துரோகிகளின் சங்கம கவிதை.

21 ம் நூற்றாண்டின் முதல் புரட்சியை பெற்றெடுத்த
எங்கள் நேபாளம் புரட்சிகர கவிதை
அதனை சீரழிக்க முயலும் இந்திய ஏகாதிபத்திய
துரோக அரசு போலி ஜனநாயகத்தின் கவிதை

இந்திய விடுதலைக்கு கட்டியம் கூறும்,
நக்சல்பாரிய புரட்சியாளர்கள்
இன்றைய நம்பிக்கை கவிதை
புரட்சி புரட்சி என்று
இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றும் சிபிஐ-சிபிஎம்
ஒழிக்கபட வேண்டிய துரோக வரலாற்றின் கவிதை.

"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்பட பின்னூட்டங்கள்!


தோழமையுடன் பு.மா.இ.முவிற்கு,

வணக்கம். 'ஸ்டாலின் சகாப்தம்' பார்த்தேன். அருமை. தெளிவான உச்சரிப்பும் பொருத்தமான உணர்ச்சியும் பொருந்திவந்துள்ள பின்னனிக் குரல் சிறப்பாக அமைந்திருக்கிறது. தோழர் ஸ்டாலின் மீதான உணர்ச்சிகரமான நேசத்தை படம் மேலும் நெருக்கமாக்குகிறது. படத்தொகுப்பும், பதிவும் தேர்ந்த முறையில் கையாளப்பட்டுள்ளன.சமகால நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டியிருப்பதும் தோழர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியயொன்றாகும். எவ்வித அலுப்பும், சோர்வுமின்றி வெகு விரைவாக படம் செல்கிறது என்பதே படத்தின் வெற்றிக்குச் சான்று. இச்சிறப்பான வெற்றியை ஈட்டிய தோழர்களின் உழைப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும் சொல்வது எனது கடமையாகும். நன்றி! பாராட்டுகள்!

படத்தில் பின்னணி இசையை இணைத்திருக்கலாம். அதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. இனிவரும் பிரதிகளில் கூட இணைத்துக் கொள்ளலாம். இன்னும் தொடர்ந்து படங்கள் கொண்டு வர முயலுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.

தோழமையுடன்
குருசாமி மயில்வாகனன்.
சிவகங்கை.
மேலும் ஸ்டாலின் சகாப்தம் ஆவணப்பட
பின்னூட்டங்கள்
வரவேற்கப்படுகிறது.

இராணுவ தலைமையகத்தை புமாஇமு தலைமையில் முற்றுகை!

Tuesday, February 3, 2009

கால வரையற்று மூடிய கல்லூரி-விடுதிகளை உடனே திற!

Related:

ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல்- புகைப்படங்கள்- வீடியோ!!

சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள்.
..
சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.இணைப்பு