Saturday, February 28, 2009

இந்தியாவில் வேறு எங்கும் இல்லை! இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான்!!



கலைஞர் ஆட்சியில்....









  • ஈழத்தமிழ் மக்களை கொன்றொழிக்கும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசின் நம்பகமான ஒரே காவலர் & ஒரே கூட்டாளி!
  • கல்லூரிகளை காலவரையின்றி மூடி மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த ஒரே தமிழனத் தலைவர்!

  • சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிசட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்! ஈழ மக்களின் எதிரி, பார்ப்பனத் திமிர் பிடித்த சு.சாமியை தாஜா செய்ய தி.மு.க அரசின் அடியாள் வேலை!

  • ஒரு நாளைக்கு ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் அடிமை சாசனத்தில் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்து போட்டு விரைவாக நாட்டை விற்கும் ஒரே ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி!
  • 123 அடிமை சாசனத்தின் நிரந்தர அடிமை!
  • காலை 4 மணி எழுந்து அயராது உழைத்து, இதுவரை இந்தியா கண்டிராத பிரம்மாண்டமான கொள்ளை! ஸ்பெக்ட்ரம் சுவாகா ரூ 60,000 கோடி!!
  • இந்தியாவிலேயே அதிக மக்களை வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளி தமிழகம் தொடர்ந்து முதலிடம்!


  • முரசொலி, எதிரொலி, சிரிப்பொலி, இசையருவி, கலைஞர் செய்திகள் என சில வினாடிகளில் தங்களது சுவிஸ் வங்கி பணத்தை ஆடம்பரமாக செலவிடும் ஏழை திரைக்கதை ஆசிரியர்!
  • கால்ஸ் சாராய ஆலைகள் போல பல ஆலைகளுடன் கைகோர்த்து கொண்டு இந்தியாவிலேயே சாராய விற்பனையில் தமிழக அரசு கடைகள் தொடர்ந்து முதலிடம்!



  • குஜராத் இனப்படுகொலையினை ஆதரித்து மெளனம் காத்தவர்!
  • பாசிச காங்கிரசோடும், இந்துவெறி பார்ப்பன பாசிச பாஜகவோடும் மாறி மாறி கூட்டணி கட்டிக் கொண்டும், 'முற்போக்கு & மதச்சாற்பற்றவர்' என தம்மை காட்டிக்கொண்டும் "தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்கசாதி வெறியர்களால் தாக்கப்படுவதில்" இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து முதலிடத்தில் வைத்திருப்பவர்!

  • அழகிரி, தளபதி, கனிமொழி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, உதயநிதி ஆகிய தமிழக மக்களின் நலன்களுக்காக தள்ளாத வயதிலும் பாடுபடும் ஒரே தாத்தா!

வெளியீடு: தமிழக உழைக்கும் மக்கள்

1 comment:

Dr.Rudhran said...

குஜராத் இனப்படுகொலையினை ஆதரித்து மெளனம் காத்தவர்! this one quality is enough

இணைப்பு